பெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்

2 weeks ago 2

* போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்

* ரூ.1.74 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்

பெரம்பலூர் : பெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 190 பயனாளிக ளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தங்கப் பாண்டியன் தலைமையில் ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என தலா 23பேர்கள் கொண்ட 3 பிளட்டோன் படைப்பிரிவு களைச் சேர்ந்த 69பேர்கள் மற்றும் ஊர்க்காவல் படை யினர் பங்கேற்ற அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டரும், எஸ்பி.யும் சமாதானத்தை குறிக்கும்வகையில் வெண் புறாக்களையும் தேசியக் கொடி நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசு தாரர்களுக்கு, மாவட்டக் கலெக்டர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையின் சார்பில் 54 பயனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகள், கூட்டுறவுத்துறை சார்பாக 57 பயனாளிகள் உள்பட பல்வேறு துறைகளின் சார்பாக 190 பயனாளிகளுக்கு ரூ1,74,09,430 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்த 18 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 25 காலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 177 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப்பள்ளி, பெரம்பலூர்  ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கௌதம புத்தர் காது கேளாதோருகான சிறப்பு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட 5- பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ, மாணவியர் பங்கேற்ற கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்டத் திட்ட இயக்குனர் தேவ நாதன், சப்.கலெக்டர் கோகுல், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் (தலைமையிடம்) மதிய ழகன், (மதுவிலக்கு) பால முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம் மாள், தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார் appeared first on Dinakaran.

Read Entire Article