பெயின்டர் வீட்டில் 5 சவரன் திருட்டு

2 months ago 12

துரைப்பாக்கம்: சென்னை திருவொற்றியூர், நேதாஜி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). பெயின்டரான இவரது மனைவி மங்கையர்க்கரசி. தீபாவளிக்காக கடந்த மாதம் 28ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து ரமேஷ் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post பெயின்டர் வீட்டில் 5 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article