'பென்ஸ்' படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் மாதவன் விளக்கம்

2 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 'புல்லட் மற்றும் கால பைரவா' போன்ற படங்களில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் பிரீபுரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் எல்.சி.யூ எனப்படும் "லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்" சாயலில் இடம் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு வில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், பகத் பாசில் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது. 'பென்ஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. படத்தின் கதையைக் கேட்டதும் நடிகர் மாதவன் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால்தான் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பென்ஸ் படத்தில் வில்லனாக நடிகர் மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில், 'பென்ஸ்' படத்தின் தான் நடிப்பது குறித்து வெளியாகியிருக்கும் செய்தியை பகிர்ந்து "என்னை பற்றிய இந்த செய்தி பார்க்க ஆர்வமாக உள்ளது. நான் இந்த எல்சியூ யூனிவெர்சஸில் அங்கம் வகிக்க விரும்புகிறேன். ஆனாலும் இந்த செய்தி எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இந்த செய்து பற்றி எந்த யூகமும் இல்லை" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் பென்ஸ் படத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

Hey this is news to me .as much as it sounds exciting and I would love to be part of a universe like this. I'm surprised with this news because I have no clue about this. Madhavan joins LCU as he roped in for Raghava Lawrence's 'Benz'…. https://t.co/UkYgaidLit

— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 12, 2024
Read Entire Article