![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38722952-untitled-8.webp)
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிபராக இருந்த ஜோ பைடன் 895 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தார். இந்த நிலையில் பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் கூறுவேன். அதன்பிறகு, ராணுவத்தில் ஆய்வு செய்ய சொல்வேன். பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம் என்றார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியினர், அரசின் ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.