பெண்கள் டி20 உலகக்கோப்பை; வெஸ்ட் இண்டீஸ்க்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

3 months ago 21

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறின.

இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சார்ஜாவில் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சுசி பேட்ஸ் 26 ரன்னிலும், ஜார்ஜியா ப்ளிம்மர் 33 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து களம் இறங்கிய அமெலியா கெர் 7 ரன், சோபி டெவின் 12 ரன், ப்ரூக் ஹாலிடே 18 ரன், மேடி கிரீன் 3 ரன், ரோஸ்மேரி மெய்ர் 2 ரன், லியா தஹுஹு 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டியான்ட்ரா டாட்டின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 129 ரன் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆட உள்ளது.

Read Entire Article