திருநெல்வேலியில் வாலிபரை கையால் தாக்கி மிரட்டியவர் கைது

4 hours ago 1

நெல்லை மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளம், கஸ்பா தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 18) 13.5.2025 அன்று தனது நண்பர்களுடன் காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த சக்திசெல்வம்(19) என்பவர் மேலே விடுவது போல் வந்துள்ளார். இதனை நேற்று முன்தினம் (15.5.2025) மேலப்பிள்ளையார்குளம் சர்ச் அருகே வைத்து மனோஜ்குமார் சக்திசெல்வத்திடம் மேற்சொன்ன சம்பவத்தைப் பற்றி கேட்டுள்ளார். அப்போது அதற்கு சக்திசெல்வம், நீ எப்படி என்னை கேட்பாய் என்று அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மனோஜ்குமார் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சக்திசெல்வத்தை நேற்று (16.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Read Entire Article