பெண்கள் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

3 months ago 19

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறின.

இதையடுத்து நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா பிளிம்மர் 33 ரன்களும், சுசி பேட்ஸ் 26 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டியான்ட்ரா டாட்டின் 4 விக்கெட்டுகளும், பிளெட்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். டியான்ட்ரா டாட்டின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Read Entire Article