பெண்கள் குழுவுடன் நாளை விண்வெளிக்கு செல்லும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி

1 month ago 6

வாஷிங்டன்,

கடந்த 1963-ம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். அதன் பிறகு, தற்போது பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த குழுவில் பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி இடம்பெற்றுள்ளார். மேலும் முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், உயிரி விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் வருங்கால மனைவியும், செய்தி தொகுப்பாளருமான லாரன் சான்செஸ் என மொத்தம் 6 பெண்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கப்பட்ட தொழிலதிபர் ஜெப் பெசாசின் 'புளூ ஆரிஜின்' நிறுவனத்திற்கு சொந்தமான 'நியூ ஷெப்பார்டு' விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இந்த விண்கலம் ஏப்ரல் 14-ந்தேதி(நாளை), வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

Read Entire Article