
சென்னை,
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை புதுப்பேட்டையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி இன்று காலை பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநில பொருளாளர் ஜி. பிரமிளா, மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி உள்பட சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் பேரணியாக புறப்பட்டு வந்தபோது, எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன்பிறகு, கண்டன குரல் எழுப்பிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.