சம்மனை கிழித்ததில் என்ன தவறு? சம்மனை பூஜையா செய்ய முடியும்? - சீமான் ஆவேசம்

4 hours ago 1

சென்னை,

நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலத்தில் இருந்து சென்னை வந்தடைந்தார். அப்போது சென்னை விமானை நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

"சம்மனை என்னிடம் கொடுத்திருக்கலாம். வீட்டில் எனது மனைவியிடம் கொடுத்திருக்கலாம். வாட்ஸ் அப்பில் கூட அனுப்பி இருக்கலாம். சம்மனை வீட்டின் கதவில் ஒட்டிச் செல்வது அநாகரீகம். என்னை திட்டமிட்டு அசிங்கப்படுத்த வேண்டுமென்றே சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியுள்ளனர். சம்மனை போலீசார் ஒட்டும்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சம்மனை ஒட்டியதற்கு கிழித்ததில் என்ன தவறு இருக்கிறது? சம்மனை பூஜையா செய்ய முடியும்?

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு, சாராய வழக்குகளில் சட்டம் தன் கடமையை செய்ததா? 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும், என் குடும்பத்தினரையும் வன்கொடுமை செய்கின்றனர்.

என் மீது தவறு இல்லை என்பதால் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடிகை வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில்தான் என் மீது பழி சுமத்துகிறார்கள். என்னை எதிர்கொள்ள முடியாமல் நடிகை வழக்கை வைத்து விளையாடுகிறார்கள்."

இவ்வாறு சீமான் பேசினார்.

Read Entire Article