
பெண்கள் பருவம் அடையும் நாளை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் ருது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படி அந்த பெண்களுக்கான பலன்களை அறிந்துகொள்ள முடியும். அவ்வகையில் ருதுவாகும் திதியை வைத்து பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பார்ப்போம். தேய்பிறை, வளர்பிறை திதிகளுக்கு ருது பலன் பொதுவாகத்தான் அமையும்.
1. பிரதமை: - நல்ல குணம், சிறந்த புத்திமானாக இருப்பாள்
2. துவிதியை-: நல்ல அழகுடையவளாக, கவர்ச்சியுடைவளாக இருப்பாள்.
3. திருதியை:- சுக போகங்களில் நாட்டம் செல்லும், சுக வாழ்வு உண்டு.
4. சதுர்த்தி: - எதையும் எதிர்த்து சமாளிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும்.
5. பஞ்சமி: நல்ல குழந்தை செல்வங்கள், நல்ல வாழ்வு அமையும்.
6. சஷ்டி:- தர்மமும், தெய்வ பக்தியும் உடையவள்.
7. சப்தமி:- கணவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்பவள்.
8. அஷ்டமி:- கணவரின் அன்பையும், பாசத்தையும் சம்பாதிப்பாள்.
9. நவமி: எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தகர்த்து வாழ்வில் வெற்றி பெறுவாள்.
10. தசமி:- தான, தர்மங்கள் செய்வாள்.
11. ஏகாதசி:- கடவுள் நம்பிக்கையுடன் இருப்பாள். எதையும் ஆராய்ந்து செயல்படக்கூடிவள்.
12. துவாதசி:- நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்வாள்.
13. திரயோதசி:- முன் கோபம் வரும், ஆனால் நல்ல குணம் உண்டு!
14. சதுர்த்தசி-:கணவர் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டவள்
15-வது திதியாக தேய்பிறையில் அமாவாசையும், வளர்பிறையில் பௌர்ணமியும் வரும்.
ஒருவர் அமாவாசை அல்லது பௌர்ணமி திதியில் பிறந்தாலோ, பருவம் அடைந்தாலோ அவர்களுக்கு திதி சவுமிய தோஷம் கிடையாது என்கிறது சாஸ்திரம். அதாவது இந்த திதிகளில் ருதுவாகும் பெண்கள் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதை தகர்த்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.
ஆனால் அமாவாசையில் பிறந்தாலோ, ருதுவானாலோ திருடர்களாக இருப்பார்கள் என சிலர் பொத்தாம்பொதுவாக சொல்வார்கள். அது அப்படி அல்ல. இந்த திதியில் ருதுவானால், பிறந்தால் மற்றவர்களின் மனதை அன்பால் திருடி விடுவார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். அமாவாசையில் ருதுவானால் நல்ல அன்பு உள்ளம் கொண்டவராகவும், எல்லோரையும் எளிதில் கவரக் கூடியவராகவும் இருப்பார். பௌர்ணமியில் ருதுவாகும் பெண் அழகுணர்ச்சியும், கற்பனை திறனும் கொண்டவராக இருப்பார். கம்பீரமும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார்.
திதி அடிப்படையிலான இந்த பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்களே. எனவே, ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்லும் போது, திதி மட்டுமல்லாமல் நாள், நட்சத்திரம், கிரக நிலைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து முழுமையான பலன்களை கணித்து சொல்வதே சிறந்தது.