வாரணாசி,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியின் பிரதமர் பேசியதாவது;
பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள் அதிகாரம் பெறும்போது சமூகம் வளர்ச்சியடையும். பெண்களுக்கு அரசாங்கம் புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்.
மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க பணியாற்றி வருகிறோம். 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.