பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்: ஜிபே மூலம் சிக்கிய இளைஞர் கைது

2 weeks ago 5

சென்னை,

சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர். அக்கடையின் குறிப்பிட்ட அந்த நாள், நேரத்தின் பரிவர்த்தனையை வைத்து செல்போன் எண்ணை கண்டறிந்து பிடித்துள்ளனர்.

ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டாக பணி புரிந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Read Entire Article