“பெண்களின் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதியேற்போம்” - அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில் விஜய் பகிர்வு

3 months ago 11

சென்னை: அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அஞ்சலை அம்மாள் நினைவஞ்சலிக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

Read Entire Article