பெண்களின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்!

4 hours ago 2

பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சில சத்தான பொருட்களை உணவில் சேர்த்து உண்டு வந்தால் ஆரோக்கியமாக இருப்பதுடன், நோய்கள் வராமல் காத்துக் கொள்ளவும் உதவும்.ஓட்ஸ்: இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து வயது பெண்களும் வாரத்தில் இரண்டு முறை இதை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதுளை: இந்தப் பழத்தை சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். உடம்பில் ஈஸ்ட்ரோஜெனின் உற்பத்தியை தூண்டுவதால் எலும்புகள் வலுப்பெறும்.

உளுந்து: பெண்களுக்கு உளுந்து மிகவும் நல்லது. எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும். பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து சேர்த்த உணவை கொடுத்தால், உடலுக்கு வலிமை கிடைக்கும்.

நெல்லிக்காய்: எலும்புகள் ஆரோக்கியமாகும். உடல் சூடு தணியும். கண் எரிச்சல், கண் அரிப்பு, இதய நோய்கள் உள்ளிட்டவை வராமல் தடுக்கும். தலைமுடி ஆரோக்கியமாக வளரும். உடல் எடையை குறைக்க உதவும்.

கற்றாழை: மலச்சிக்கல் பிரச்னையை சரியாக்கும். உடலை சுத்தமாக்கும். உடல் எடை குறைக்க உதவும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

மூங்கில் அரிசி: ஏராளமான கலோரிகள் உள்ள இதை சேர்ப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். உடல் எடை குறையும். வாரம் இருமுறை சேர்த்துக் கொள்வது நலம்.

பப்பாளிக்காய்: இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து, இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உதவும். உடல் சோர்வாக இருக்கும் சமயத்தில் பப்பாளி சாப்பிட்டால் இழந்த சத்துக்களை மீண்டும் பெற உதவும்.

வாழைப்பூ: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். உடல் சூட்டை தணிக்கும். கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைக்கும். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு வரும் உடல் அசதி, வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு இவைகளை சரி செய்யும்.

கவுனி அரிசி: இதில் ஆன்டி ஆக்சிடென்ட், நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ளன. உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது இது.

எள்: மெக்னீசியம் சத்து அதிகளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறையும். கர்ப்பப்பையை பலப்படுத்தும். பூப்பெய்திய பெண்களுக்கு எள் சேர்த்த உணவுகளை கொடுப்பது நல்ல பலன்களை தரும்.

முருங்கைக் கீரை: இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது. பிரசவித்த பெண்கள் இந்தக் கீரையை உணவில் சேர்த்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பீட்ரூட்: இதை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுத்தமாகும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல ஸ்டாமினாவும் கிடைக்கும்.

தொகுப்பு:  ேக.சித்ரா, சென்னை.

 

The post பெண்களின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்! appeared first on Dinakaran.

Read Entire Article