புதுச்சேரியில் பாஜகவின் புதிய அமைச்சர் ஆகிறார் ஜான்குமார்; நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் ஒப்புதல்

5 hours ago 1

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தரப்பில் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் மற்றும் 3 புதிய நபர்கள் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜக அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் மற்றும் அக்கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த மாதம் 27-ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தங்கள் பதவிகளை துறந்தனர். நெடுநாட்களாக பதவிகளை கேட்டு வரும் வேறு சிலருக்கு இப்பதவிகளை வழங்குவற்காக பாஜக தலைமை இந்த முடிவை எடுத்தது.

Read Entire Article