பெண் விஏஓ மீது சாணி வீசி தாக்கிய உதவியாளர் கைது

3 hours ago 1

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் குறு வட்டத்துக்குட்பட்ட வடக்கனந்தல் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் தமிழரசி (39). இவரது உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த சங்கீதா பணியாற்றி வந்தார்.இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த டிசம்பர் 17ம் தேதி மதியம் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதியின்றி அரசு பதிவேடுகளை கிராம உதவியாளர் சங்கீதா வெளியே எடுத்து வந்து, விஏஓ தமிழரசியை உள்ளே வைத்து பூட்டி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று சங்கீதா திடீரென விஏஓ தமிழரசி இருந்த அலுவலகத்துக்குள் புகுந்து, மாட்டு சாணியால் அடித்து அசிங்கப்படுத்தி, தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த தமிழரசி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சங்கீதாவை கைது செய்தனர்.

The post பெண் விஏஓ மீது சாணி வீசி தாக்கிய உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article