திருச்சி,பிப்.5: திருச்சி மாவட்ட அளவில் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநா் பணிக்கு ஒரேஒரு காலி பணியிடத்திற்கு வெளிமுகமையிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியலில் நான்காண்டு பட்டப்படிப்பு (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடா்பான படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ..50,000 மட்டும் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள வெளி முகமையிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: புள்ளியல் துணை இயக்குநா், மாவட்ட புள்ளியல் அலுவலகம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சி-1. விண்ணப்பிக்க கடைசி நாள்:பிப்.19 ஆகும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
The post இளம் தொழில்முறை வல்லுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.