பெண் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி செயின் பறிப்பு..

4 months ago 16
சென்னை அருகே தாம்பரத்தில் பிரியங்கா என்ற பெண்ணின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு உத்தரப்பிரதேசத்துக்குத் தப்பிச் செல்லவிருந்த ராம் மிலன் என்ற நபரை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பிரியங்காவின் பக்கத்து வீட்டில் தங்கி ராம் மிலன் வேலை செய்து வந்துள்ளான். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவனது மனைவி, தனக்கு தங்கச் சங்கிலி வேண்டும் என்று கேட்டதாகவும் கையில் பணம் இல்லாததால், பிரியங்காவின் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article