நாமக்கல், பிப்.22: நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை சகோதரிகளின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜேடர்பாளையம் எஸ்ஐ கஜிதாபேகம், ஆயுதப்படை ஏட்டு பிரார்த்தனா ஆகியோருக்கு வளைகாப்பு நடைபெற்றது. காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசார் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், இருவருக்கும் சீர்வரிசைகள் செய்து வளைகாப்பு வைபவத்தை நடத்தினார்கள். இருவருக்கும் கை நிறைய வளையல்கள் அணிவித்து மகிழ்ந்தனர். சமுதாயத்தில் பெண்களுக்கு எப்படி வளைகாப்பு நடைபெறுமோ அதேபோன்று காவல்துறை சார்பில் முதன் முறையாக, காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
The post பெண் போலீசாருக்கு வளைகாப்பு appeared first on Dinakaran.