டெல்லி: அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது X தள பதிவில் கூறியதாவது;
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து, அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பங்களித்த கல்வி, தொழில்நுட்பம், திறன்கள், சுகாதாரம் போன்ற துறைகளில் எங்கள் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெண் குழந்தைக்கு எதிராக எந்த பாகுபாடும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் நாங்கள் சமமாக உறுதியாக இருக்கிறோம். என்று பதிவிட்டுள்ளார்.
The post பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.