வேலூர், மார்ச் 23: வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு மகளிர் நலன் தொடர்பான ஒரு நாள் சிறப்பு பயிற்சி விஐடியில் நேற்று நடந்தது. இதனை ஏடிஜிபி சீமா அகர்வால் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், காவல்துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர் தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் விஐடியில் நேற்று ஒரு நாள் பெண் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். டிஐஜி தேவராணி, ஐஜிக்கள் துரை, சாமுண்டீஸ்வரி, எஸ்பி மதிவாணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் வேலூர் சரகத்தை சேர்ந்த வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய பயிற்சி மாலை 5 மணி வரை நடந்தது.
The post பெண் இன்ஸ்., எஸ்ஐக்களுக்கு மகளிர் நலன் சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.