சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே பெட்ரோல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எண்ணூரில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிக் கொண்டு குன்றத்தூர் நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி விபத்தில் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 8 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது. சாலையில் கொட்டிய பெட்ரோல், டீசலை தீயணைப்புத் துறையினர் நீரை ஊற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.
The post பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.