நாகர்கோவில், டிச.3 : பெஞ்சல் புயல் கோர தாண்டவத்தால் புதுவை மற்றும் விழுப்புரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மூழ்கி உள்ளதுடன், ரயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்ற ரயில்கள் நேற்று முன் தினம் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நேற்று பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி நேற்று சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு நாகர்கோவில் புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20627) ரத்து செய்யப்பட்டது. இதே போல் நாகர்கோவிலில் இருந்து நேற்று மதியம் 2.20 க்கு, சென்னை புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20628) ரத்து செய்யப்பட்டது. சென்னை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (விழுப்புரம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் டவுன் வழியாக செல்லும்) ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதே போல் குருவாயூர் – சென்னை (நாகர்கோவில் டவுன், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக) இன்று ரத்து செய்யப்படுகிறது.
The post பெஞ்சல் புயல் பாதிப்பு எதிரொலி: நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.