சென்னை: புயல் பாதித்த விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று நேரில் களஆய்வு செய்தார். அப்போது, மாநில தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், விழுப்புரம் மாவட்ட தலைவர் என்.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும்,கடலூர், திருவெண்ணைநல்லூர், திருக்கோவலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் புயல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிலச்சரிவு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மின்சார பாதிப்புகளை விரைந்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ததற்கு தனது நன்றியையும் பாராட்டுதலையும் தமிழக அரசுக்கு தெரிவித்தார். மேலும், அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு என்பதை அரசு கவனத்தில் கொண்டு, மறு ஆய்வு செய்து இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, குறிப்பாக திருவெண்ணைநல்லூரில் பாதிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அழிந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மாவட்ட பேரமைப்பு தலைமையோடு இணைந்து உதவிகளை மேற்கொள்ளப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.
The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.