நடிகை பலாத்கார வழக்கு நடிகர் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

3 hours ago 1

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகரும், கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், மலையாள நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறி தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக ஆலுவாவைச் சேர்ந்த ஒரு மலையாள நடிகை சமீபத்தில் போலீசில் புகார் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் முகேஷ் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதன்படி விசாரணைக்கு ஆஜரான முகேஷை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த தனிப்பிரிவு போலீசார் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பாக இமெயில், வாட்ஸ் ஆப் உள்பட டிஜிட்டல் ஆதாரங்களும், சில சாட்சிகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நடிகை பலாத்கார வழக்கு நடிகர் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article