புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் நேற்று பதிவிடுகையில், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பிரச்னைகள் அதிரித்துள்ள போதிலும், அரசாங்கம் 100 நாள் வேலைக்கான நிதியை குறைத்துள்ளது.மேலும் அவமானப்படுத்தும் வகையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் 20 % முந்தைய ஆண்டுகளின் நிலுவை தொகையை செலுத்தப்பட உள்ளது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கிராமப்புற துயரங்கள் இருந்தபோதிலும், 2025-26 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ரூ.86,000 கோடியாக தேக்கி கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரம் அளிக்கும் விஷயத்தில் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
The post 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் தேக்க நிலை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.