பெங்களூருவில் நடந்த இந்திய ஓபன் ஜம்ப் போட்டியில் திருச்சி மாணவர் தங்கம் வென்றார்

1 day ago 3

 

திருச்சி, மார்ச் 26:பெங்களூருவில் நடந்த இந்திய ஓபன் ஜம்ப் போட்டியில் திருச்சி கல்லூரி மாணவர் தங்கம் வென்றார். இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் 20 வயதிற்குட்பட்ட மற்றும் சீனியர் பிரிவினர்களுக்கான நான்காவது இந்திய ஓபன் ஜம்ப் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள அஞ்சு பாபி உயர் செயல்திறன் மையத்தில் நடந்தது. இதில் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த 2ம் ஆண்டு ஆங்கில துறையில் பயிலும் மாணவன் யுவராஜ் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்துக்காக பங்குபெற்று தங்கப்பதக்கமும், சீனியர் பிரிவில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை பொருளாதாரம் பிரிவில் படிக்கும் மாணவன் நவீன் மும்முறை தாண்டுதல் போட்டியில் சீனியர் பிரிவில் நான்காவது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்று முதலிடம் மற்றும் நான்காவது இடம் பிடித்த கல்லூரி மாணவர்களை முதல்வர் பிரின்சி மெர்லின், நிதியாளர் தனபால், துணை முதல்வர்கள் சத்தியசீலன், ரவிதாஸ், உடற்கல்வி துறை தலைவர் பால்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

The post பெங்களூருவில் நடந்த இந்திய ஓபன் ஜம்ப் போட்டியில் திருச்சி மாணவர் தங்கம் வென்றார் appeared first on Dinakaran.

Read Entire Article