பெங்களூருக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த பதிரனா

2 days ago 2

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த போட்டிக்கான டாஸில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவனில் நாதன் எல்லீசுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா இடம்பெற்றுள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாத அவர் இந்த போட்டியில் களமிறங்குவது சென்னை அணிக்கு பலமாக அமையும்.

மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரசிக் தார் சலாமுக்கு பதிலாக இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் அறிமுகம் ஆகிறார். கடந்த போட்டியில் இவர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:- 

சென்னை: கெயிக்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது

பெங்களூரு: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்


Read Entire Article