
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 51 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் மும்பை, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதத்தில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜெர்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேட்ச் பிக்சிங் காரணமாக 2016, 2017 சீசன்களில் விளையாட சி.எஸ்.கே-வுக்கு தடை விதிக்கப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக கருப்பு வெள்ளை (ஜெயில் ஜெர்சி) டீசர்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சி.எஸ்.கே ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.