
பாரீஸ்,
ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய லினா ரைபகினா 6-1, 6(2)-7(7), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் இதனால் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.