பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு வர மறுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: காங்., எம்எல்ஏ ரவி கனிகா குற்றசாட்டு

2 hours ago 1

பெங்களூர்: கன்னடராக இருந்து கொண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு வர மறுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்., எம்எல்ஏ ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.

தனது வீடு ஐதராபாத்தில் உள்ளதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது எனவும் தனக்கு தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும் ரவி கனிகா குற்றம் சாட்டினார். கன்னடராக இருந்து கொண்டு கர்நாடகாவை அவமதிக்கும் ராஷ்மிகாவிற்கு பாடம் புகட்ட வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். காந்தாரா நாயகனான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியான கனட திரைப்படத்திலேயே ராஷ்மிகா அறிமுகமானார்.

கர்நாடகா குடகு மாவட்டத்தை சேர்ந்த ராஷ்மிகா தன்னை ஆந்திராவில் மகளாக அடையாளப்படுத்தி கொண்டு கன்னட திரைத்துறையை அவமதிப்பதாக கன்னட அமைப்புகளும் போர் கொடி தூக்கியது சர்ச்சைகுள்ளாகி உள்ளது. ரவி கனிகாவின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர் காங்கிரஸ் குண்டர் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார். தங்கள் மண் சார்ந்து பேச தங்களுக்கு உரிமை உள்ளதாக ராஜிவ் சந்திர சேகருக்கு ரவி கனிகா பதிலளித்துள்ளார்.

The post பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு வர மறுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: காங்., எம்எல்ஏ ரவி கனிகா குற்றசாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article