
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.