பெங்களூரு: ஐ.பி.எல். போட்டியின்போது ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன், மகளுக்கு பாலியல் தொல்லை

3 hours ago 2

பெங்களூரு,

ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது, டையமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக வசதி கொண்ட உயரடுக்கு பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்து கொண்டிருந்தனர்.

ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் மற்றும் மகன் ஒன்றாக அந்த வரிசையில் அமர்ந்திருந்தபோது, 2 பேர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மே 3-ந்தேதி இரவு 9.40 மணியளவில் நடந்த அந்த சம்பவம் பற்றி அதிகாரியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், அவருடைய 26 வயது மகள் மற்றும் 22 வயது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் தகாத இடத்தில் தொட்டும், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டனர் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, புகார் பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் கூறும்போது, அந்த 2 பேரில் ஒருவர் மூத்த வருமான வரி துறை அதிகாரி என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article