பெங்களூரு-எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

6 days ago 4

சேலம்,

கோடை காலத்தையொட்டி பொதுமக்களின் வசதிக்காக பெலகாவி-பெங்களூரு, பெங்களூரு-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெலகாவி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07373) இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. மறுமார்க்கமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-பெலகாவி சிறப்பு ரெயில் (07374) வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு பெலகாவியை சென்றடையும்.

அதேபோல் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06575) இன்று பெங்களூருவில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளம்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (எண் 06576) வருகிற 14-ந்தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கமாகவும் பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Read Entire Article