பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் 2 கி.மீ துரத்தி பிடித்த போலீசார்

4 months ago 12

சேலம், ஜன. 4: பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்காவை, 2 கி.மீ துரத்தி வந்து போலீசார் மடக்கி பிடித்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றிரவு எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார், காமலாபுரம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிடுவதற்காக போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார், நிற்காமல் சேலம் நோக்கி வேகமாக வந்தது. இதனையடுத்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு அந்த காரை துரத்தி வந்த போலீசார், அங்குள்ள தனியார் பள்ளி அருகே காரை மடக்கினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பியோடினார். இதனையடுத்து அந்த காரை சோதனையிட்டதில், உள்ளே 66 மூட்டைகளில் சுமார் 500 கிலோ குட்கா இந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் 2 கி.மீ துரத்தி பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article