சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறும்

3 hours ago 3

ஈரோடு, மே 15: ஈரோடு மாவட்டம், சித்தோட்டில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து, வாரந்தோறும் வியாழக்கிழமை அங்கு மஞ்சள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இநாம்) இணைக்கப்பட்டதையடுத்து, இனிமேல், வியாழக்கிழமைக்கு பதில், வெள்ளிகிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும்.

எனவே, விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளை கல், மண், தூசுகள் நீக்கி, சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மேற்பார்வையாளரை 99420 80543 என்ற எண்ணிலும், கண்காணிப்பாளரை 70105 66694 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என விற்பனை கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

The post சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறும் appeared first on Dinakaran.

Read Entire Article