பூமிக்கடியில் 60 அடி ஆழ பங்கரில் பதுங்கியிருந்த ஹெஸ்புல்லா தலைவர் நஸரல்லாவை கொன்ற இஸ்ரேல் ராணுவம்..

3 months ago 27
லெபனானில், பூமிக்கடியில் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் தலைமறைவாக இருந்த ஹெஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸரல்லாவை இஸ்ரேல் ராணுவம் 80 ஆயிரம் கிலோ வரையிலான வெடி குண்டுகளை அடுத்து அடுத்து வெடிக்குமாறு வீசி கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் பெய்ரூட்டில், ஹெஸ்புல்லாவின் கோட்டை என அழைக்கப்பட்ட டாஹியாவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அறையில் ஹெஸ்புல்லா தலைவர்களின் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வந்தன. 2006 முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலிருந்த நஸரல்லாவின் நடமாட்டங்களை மாதகணக்கில் கண்காணித்துவந்த இஸ்ரேல் உளவாளிகள், முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்க வருவதை உறுதிபடுத்திய பின் ராணுவத்துக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article