திருக்காட்டுப் பள்ளி, பிப்.18: பூதலூர் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருக்காட்டு பள்ளி அருகே உள்ள பூதலூர் பஸ் ஸ்டாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை பூதலூர் ஊராட்சி ஒன்றியம் பூதலூர் ஊராட்சி 15 ஆவது நிதி குழு மாநியத்தின் மூலம் 2020-21 ஆம் ஆண்டிற்கான புதிய கழிவறைக் கட்டிடம் ரயிலடி பேருந்து நிலையம் மதிப்பீடு ரூ.7 லட்சம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூதலூரில், உள்ள ரயில் நிலையத்திற்கும் பஸ்டாண்டிற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பயணிகள், பள்ளிக் கல்லூரி, மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள தரைக்கடை வைத்திருப்போர், பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த புதிய கழிவறைக் கட்டிடத்தை திறக்க உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் திறக்காமல் காலதாமதம் செய்கின்றனர். எனவே, உடனடியாக இந்த கழிவறைக் கட்டிடத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பூதலூர் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.