சேலம், மே 6: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் அயோத்தியாப்பட்டணத்தில் நகை கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி நகை கடையில் வியாபாரத்தை முடித்து இரவு 9மணிக்கு கடை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அடுத்த நாள் காலை கடைக்கு வந்து பார்த்து போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் ஷட்டரின் உள் பூட்டை மர்மநபர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் ஷட்டரின் உள் பூட்டை உடைக்க முடியாததால் மர்நபர்கள் அங்கிருந்து தப்பியோடிது தெரிந்தது. இதுகுறித்து ஜனார்த்தனன் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்தனர். அதில், 2 மர்மநபர்கள் நகை கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பூட்டை உடைத்து நகை கடையில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.