மணல் லாரிகளை இயக்காமல் மே 23 முதல் காத்திருப்பு போராட்டம்: உரிமையாளர்கள் அறிவிப்பு

2 hours ago 2

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 2023-ம் ஆண்டு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனையிட்டு வழக்கு பதிவு செய்தனர்.

அப்போது முதல் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், மணல் எடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட 55,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை வாய்ப்பை இழந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Read Entire Article