இன்று முதுமலை செல்கிறார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

6 hours ago 2

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். அவர் நேற்று காலை 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார். நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் முதல்-அமைச்சருக்கு புத்தகங்கள், சால்வை, பூங்கொத்து கொடுத்து பொதுமக்கள்உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அப்போது ஆ.ராசா எம்.பி., தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உடனிருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிடுகிறார்.

நாளை மறுநாள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறார். 16-ந் தேதி சுற்றுப்பயணம் முடிந்து கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Read Entire Article