'புஷ்பா 2' வெற்றி விழா: ரசிகர்களின் அன்புதான் நிரந்தரம் - நடிகர் அல்லு அர்ஜுன்

1 month ago 5

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ளது.

குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும், புஷ்பா 2 படம் 6 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ரிலீஸான 6 நாட்களிலேயே விரைவாக ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது.

Charming style and an unmatched aura ✨Icon Star @alluarjun looks dashing at the #Pushpa2TheRule THANK YOU INDIA PRESS MEET in Delhi.#PUSHPA2HitsFastest1000Crhttps://t.co/eJusnmNS6Y#Pushpa2#WildFirePushpa pic.twitter.com/Pb9uZFblWu

— Pushpa (@PushpaMovie) December 12, 2024

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன், " ஆயிரம் கோடி வசூல் என்பது அன்பின் வெளிப்பாடு. இதுபோன்ற எண்கள் தற்காலிகமானதுதான். ஆனால் ரசிகர்களின் அன்புதான் நிரந்தரமானது. இச்சாதனையை விரைவில் மற்றுமொரு திரைப்படம் முறியடிக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி" என்று பேசியுள்ளார்.

Thank you Delhi. #TeamAA #Pushpa2 pic.twitter.com/uxjeDxWQZU

— Allu Arjun (@alluarjun) December 12, 2024
Read Entire Article