'புஷ்பா 2'-ல் ஷ்ரத்தா கபூரா?: 'சமந்தா, தமன்னாவை முறியடிக்க முடியாது' - ரசிகர்கள் விமர்சனம்

3 months ago 15

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்த படம் 'ஸ்ட்ரீ 2'. இப்படத்தையடுத்து ஷ்ரத்தா கபூர், 'தூம் 4' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தசூழலில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படத்தில் ஷ்ரத்தா கபூர் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன்படி, பயனர் ஒருவர் 'ஷ்ரத்தா கபூர் கவர்ச்சி நடனத்திற்கு சரியாக இருக்கமாட்டார்' என்றும் மற்றொருவர், யாராலும் கவர்ச்சி நடனத்தில் தமன்னாவை முறியடிக்க முடியாது என்று, வேறொருவர் 'ஷ்ரத்தா கபூரால் சமந்தாவை முறியடிக்க முடியாது' என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் வரும் 'ஊ சொல்ரியா' பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article