'புஷ்பா 2' டிரெய்லர் அப்டேட் கொடுத்த படக்குழு!

2 months ago 14

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி டிசம்பர் 5ம் தேதியே உலகளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்தது.

'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. 'புஷ்பா 2' படத்தின், குத்து பாடலுக்கு இந்தி நடிகைகள் ஆட இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ரீலீலா சமந்தாவும் இணைந்து நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா - 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லரை விரைவில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Read Entire Article