புழல் மத்திய சிறையில் ஆசனவாயில் மறைத்து கடத்திய கஞ்சா பறிமுதல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு

3 days ago 1

புழல்: புழல் மத்திய சிறையில் நேற்று ஆசனவாயில் மறைத்து வைத்து, சிறைக்குள் ஒரு கைதி கஞ்சா கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் 4 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், போலீசாரை பார்த்ததும் கஞ்சாவை போட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்தும் விசாரிக்கின்றனர்.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை, தண்டனை மற்றும் பெண்கள் பிரிவு என மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவு கண்காணிப்பு கோபுரம் அருகே சந்தேக நிலையில் சுற்றி திரிந்த அஜித் என்ற கைதியை சிறைக் காவலர்கள் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் தனது ஆசனவாயில் கஞ்சா பொட்டலத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவரது ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட கைதி அஜித்திடம் காவலர்கள் விசாரித்ததில், நேற்று மாலை மற்றொரு கைதி கார்த்திக் என்பவரை சந்திக்க வந்த உறவினர் முருகன் என்பவர், சுற்றுச்சுவரின் மறுபக்க சாலையில் இருந்து சிறைக்குள் வீசிய கஞ்சாவை, ஆசனவாயில் மறைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்த அடிப்பதற்காக எடுத்து செல்ல முயற்சித்தது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் சிறைக்குள் கஞ்சா வீசிய முருகன், சிறையில் கஞ்சா பயன்படுத்த முயன்ற கைதிகள் கார்த்திக், விஜய், அஜீத் ஆகிய 4 பேர்மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல் செங்குன்றம் அருகே காந்தி நகரில் நேற்றிரவு சோழவரம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒரு மர்ம நபர் கையில் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதற்குள் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை சோழவரம் போலீசார் ஆய்வு செய்து, கஞ்சாவை போட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post புழல் மத்திய சிறையில் ஆசனவாயில் மறைத்து கடத்திய கஞ்சா பறிமுதல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article