மதுரை: சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை, ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் 269 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐகோர்ட், மதுரை கிளை மற்றும் ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் ஒன்றிய அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள், ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள், தனி வழக்கறிஞர்களை நியமனம் செய்து ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னை ஐகோர்ட்டிற்கு மதனகோபால் ராவ், கிருஷ்ணமாச்சாரி, சவுந்தரராஜன், பிரிசில்லா பாண்டியன், அஸ்வத்தாமன், கோபிகா நம்பியார் உட்பட 67 பேர் ஒன்றிய அரசு மூத்த வழக்கறிஞர்களாகவும், பூனம்சோப்ரா, கே.பாலாஜி. கங்காதரன், எம்.பி.ஜெய்ஷா உட்பட 94 பேர் ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐகோர்ட் மதுரை கிளையில் வி.வணங்காமுடி, என்.ஜெயகுமார், டி.கேசவன், ஆர்.நந்தகுமார், எம்.காத்திக்கேய வெங்கடாச்சலபதி, ஜி.தாழைமுத்தரசு, ஜெ.அழகுராம் ஜோதி, எம்.கருணாநிதி, ஏ.ராஜாராம், ஆர்.எம்.மகேஷ் குமாரவேல், கே.கோகுல், எச்.வேலவதாஸ், பி.சுப்பையா, ஏ.பி.ராஜசிம்மன், வி.மலையேந்திரன், கே.பி.கிருஷ்ணதாஸ் உட்பட 37 பேர் ஒன்றிய அரசு மூத்த வழக்கறிஞர்களாகவும், வி.முரளிகணேஷ், டி.மகேந்திரன், எம்.டி.பூர்ணாச்சாரி, ஆர்.சரவணகுமார், பி.பிரிஜேஷ்குமார், ஆர்.கவுரிசங்கர், ஆர்.எம்.அருண்சுவாமிநாதன், ஜி.மூவேந்திரன் உட்பட 52 பேர் ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாகவும், ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை கிளைக்கு 19 ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post சென்னை உயர்நீதி மன்றம், மதுரை கிளைக்கு ஒன்றிய அரசு வக்கீல்கள் 269 பேர் நியமனம் appeared first on Dinakaran.