புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்

1 month ago 6

சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ள. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அதேவேளை, தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி கைதிகளிடமிருந்து கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புழல் சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே இன்று தூய்மை பணியாளர்கள் பணி செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள புதரில் மர்ம பொட்டலம் கிடந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள் மர்ம பொட்டலத்தை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 1 செல்போன், 39 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்த சிறைத்துறை அதிகாரிகள், சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article