பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி அவற்றை ரேஷன் கடை வாசலிலேயே வைத்து ஓட்டல்களுக்கும் விற்பனை செய்யும் வீடியோ சமூகவலைதள பக்கத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதுசம்பந்தமாக போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் மற்றும் ஹஜ் கமிட்டி எதிரே உள்ள வால்டாக்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 3 ரேஷன் கடைகளுக்கு வரும் பெண்கள் அங்கிருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி ஓட்டல் வைத்துள்ளவர்களுக்கு அங்கேயே விற்பனை செய்தனர்.
இந்த வீடியோ அடிப்படையில், பெண்களை பற்றி விசாரிக்கின்றனர். இதில் ஒரு பெண் பேசும்போது, ‘’ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ அரிசியை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 8 ரூபாய்க்கு விற்பனை செய்வோம். இந்த அரிசியைத்தான் சென்னையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பயன்படுத்துகிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது’ என்று கூறுகிறார்.
The post புளியந்தோப்பு பகுதியில் கடை வாசலிலேயே வைத்தே ரேஷன் அரிசி விற்பனை: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.