ஐஓபி வங்கியில் வேலை: 400 பணியிடங்கள்-தமிழ் தெரிந்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

4 hours ago 2

சென்னை,

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர்(உள்ளூர் வங்கி அதிகாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம் : மொத்தம் 400

மாநில வாரியாக:

* தமிழ்நாடு - 260

* ஒடிசா - 10

* மகாராஷ்டிரா - 45

* குஜராத் - 30

* மேற்கு வங்கம் - 34

* பஞ்சாப் - 21

கல்வி தகுதி : டிகிரி மற்றும் உள்ளூர் மொழித்திறன் அவசியம். அதாவது, தமிழகத்தில் உள்ள பணியிடங்கள் என்றால் தமிழ் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ளூர் மொழியில் படித்தவர்கள், அதற்கு ஆவணமாக மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்தால் உள்ளூர் மொழித்திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயது வரை, அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு

சம்பளம் : ரூ. 48,480 – 85,920/- வரை

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழகத்தில்) : சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சிராப்பள்ளி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.05.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf

Read Entire Article